Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரேசிலில் ஒரே நாளில் 15 ஆயிரத்து 691 பேருக்கு கொரோனா உறுதி

பிரேசிலில் ஒரே நாளில் 15 ஆயிரத்து 691 பேருக்கு கொரோனா உறுதி

By: Monisha Wed, 27 May 2020 11:34:24 AM

பிரேசிலில் ஒரே நாளில் 15 ஆயிரத்து 691 பேருக்கு கொரோனா உறுதி

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் மற்றும் பலியானோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து, பிரேசிலில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ளது. உலகளவில் பாதிப்பு எண்ணிக்கையில் பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

china,coronavirus,brazil,impact number,death toll ,சீனா,கொரோனா வைரஸ்,பிரேசில்,பாதிப்பு எண்ணிக்கை,பலி எண்ணிக்கை

பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 15 ஆயிரத்து 691 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 90 ஆயிரத்தை கடந்துள்ளது.

இதேபோல், பிரேசிலில் கொரோனா வைரசுக்கு ஒரே நாளில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியானார்கள். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 24 ஆயிரத்து 500-ஐ தாண்டியுள்ளது.

கொரோனா வைரசிற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் தொற்று தீவிரமாக உலகம் முழுவது பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|