Advertisement

உ.பி.யில் சட்டசபை ஊழியர்கள் 24 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Monisha Wed, 19 Aug 2020 11:33:39 AM

உ.பி.யில் சட்டசபை ஊழியர்கள் 24 பேருக்கு கொரோனா பாதிப்பு

உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டசபை ஊழியர்கள் 600 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் கடுமையாக உயர்ந்து வருகிறது. நாட்டில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் உத்தரபிரதேசமும் ஒன்று. இங்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதீய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநில சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டசபை ஊழியர்கள் 600 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

uttar pradesh,assembly staff,corona virus,testing,vulnerability ,உத்தரபிரதேசம்,சட்டசபை ஊழியர்கள்,கொரோனா வைரஸ்,பரிசோதனை,பாதிப்பு

இந்த நிலையில், சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்கும் எம்.எல்.ஏ.க்கள அனைவருக்கும் கொரோனா பரிசோதனையை அம்மாநில அரசு கட்டாயமாக்கி உள்ளது. இதன்படி நேற்று முதல் எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை தொடங்கப்பட்டது.

இதுபற்றி சட்டசபை சபாநாயகர் ஹ்ருத்யா நாராயண் திக்‌ஷித் கூறியதாவது:- "சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்கும் எம்.எல்.ஏ.க்கள ஒவ்வொருவரும் தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதி செய்து கொளள வேண்டும். அதன்பின்னரே அவர்கள சட்டசபைக்குள அனுமதிக்கப்படுவார்கள்" என்று கூறியுள்ளார்.

Tags :