வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா உறுதி
By: Monisha Mon, 22 June 2020 12:45:49 PM
வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 477 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் மாநிலத்தில் புதிதாக 2 ஆயிரத்து 532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 59 ஆயிரத்து 377 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 25 ஆயிரத்து 863 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 32 ஆயிரத்து 754 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 757 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 477 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 503 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 106 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர்.