Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 87 பேருக்கு கொரோனா உறுதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 87 பேருக்கு கொரோனா உறுதி

By: Monisha Fri, 19 June 2020 1:11:32 PM

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 87 பேருக்கு கொரோனா உறுதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 3,285 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 87 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் புதிதாக 2 ஆயிரத்து 141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 52 ஆயிரத்து 334 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 21 ஆயிரத்து 990 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 28 ஆயிரத்து 641 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 625 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 37,070 ஆக அதிகரித்துள்ளது.

chengalpattu,coronavirus,infection,tamilnadu ,செங்கல்பட்டு,கொரோனா வைரஸ்,பாதிப்பு,தமிழ்நாடு

இந்நிலையில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 3,285 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 87 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,372 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,695 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 38 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் செங்கல்பட்டு மாவட்டம் உட்பட 4 மாவட்டங்களில் நள்ளிரவு முதல் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :