Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 184 பேருக்கு கொரோனா உறுதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 184 பேருக்கு கொரோனா உறுதி

By: Monisha Thu, 23 July 2020 10:01:02 AM

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 184 பேருக்கு கொரோனா உறுதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கனவே 2,721 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 184 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 86 ஆயிரத்து 492 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 51 ஆயிரத்து 765 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், நோய் பாதிப்பில் இருந்து மாநிலத்தில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 583 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு 2 ஆயிரத்து 700 பேர் உயிரிழந்துள்ளனர்.

kanyakumari district,corona virus,infection,death,treatment ,கன்னியாகுமரி மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 89,561 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கனவே 2,721 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 184 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,905 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 976 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்க மாவட்டம் முழுவது தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுகாதாரத்துறையினர் வீடு வீடாக சென்று சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் சந்தைகளில் மக்கள் கூட்டம் கூடாதவாறு நகராட்சி ஊழியர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

Tags :
|