Advertisement

தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா உறுதி

By: Monisha Wed, 08 July 2020 4:45:48 PM

தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில் ஏற்கனவே ஒரு சில எம்எல்ஏக்களுக்கும், அமைச்சருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளநிலையில் மின் துறை அமைச்சர் தங்கமணி அவர்களுக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கடந்த சில நாட்களாக கொரோனா அறிகுறி இருந்துள்ளது. இதனை அடுத்து அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா பாசிட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. இதனால் அவர் தற்போது சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால் தற்போது நடைபெற்று வரும் முதலமைச்சர் மற்றும் மத்திய எரிசக்தி துறை அமைச்சர் சந்திப்பில் அமைச்சர் தங்கமணி கலந்து கொள்ளவில்லை.

tamil nadu,coronavirus,vulnerability,minister,thangamani ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பாதிப்பு,அமைச்சர்,தங்கமணி

மேலும் தங்கமணி அவர்களுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து நாமக்கல்லில் உள்ள அவரது அலுவலகம் மூடப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனி, ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன், செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்டி அரசு, செஞ்சி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ மஸ்தான், பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகரன், உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ குமரகுரு, கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுனன் ஆகியோர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags :