Advertisement

ரஷ்யா கடந்த 24 மணி நேரத்தில் 8,404 பேருக்கு கொரோனா உறுதி

By: Monisha Wed, 10 June 2020 6:04:07 PM

ரஷ்யா கடந்த 24 மணி நேரத்தில் 8,404 பேருக்கு கொரோனா உறுதி

கொரோனா வைரஸுக்கு எதிரான போரை உலக நாடுகள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றன. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 73.12 லட்சத்தைக் கடந்துள்ளது.

ரஷ்யாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மற்றும் குணமடைபவர்களின் எண்ணிக்கை குறித்து ரஷ்யாவின் சுகாதார துறை அதிகாரி கூறியதாவது:-

ரஷ்யா கடந்த 24 மணி நேரத்தில் 8, 404 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 4,93,657 ஆக அதிகரித்துள்ளது. ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் அதிகபட்சமாக 199,785 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

russia,corona virus,health department,corona confirmation,vulnerability count ,ரஷ்யா,கொரோனா வைரஸ்,சுகாதார துறை,கொரோனா உறுதி,பாதிப்பு எண்ணிக்கை

மேலும் ரஷ்யாவில் கொரோனாவுக்கு 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனாவுக்கான பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் கரோனா தொற்று அதிகரித்து வந்தாலும் அங்கு குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யாவில் 10,000க்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். ரஷ்யாவில், இதுவரை கரோனா பாதிப்பிலிருந்து 2,52,783 பேர் குணமடைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
|