Advertisement

தேனி மாவட்டத்தில் புதிதாக 130 பேருக்கு கொரோனா உறுதி

By: Monisha Thu, 16 July 2020 3:33:20 PM

தேனி மாவட்டத்தில் புதிதாக 130 பேருக்கு கொரோனா உறுதி

தேனி மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனவால் 1,975 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று புதிதாக 130 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,51,820 ஆக உள்ளது. தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 97,310ல் இருந்து 1,02,310 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு எண்ணிக்கை 2,167 ஆக உயர்ந்துள்ளது.

தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா வைரசால் 1,916 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் 30 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போடியை சேர்ந்த 42 வயது ஆண், கம்பத்தை சேர்ந்த 72 வயது முதியவர் ஆகிய 2 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்து உள்ளது.

theni district,corona virus,infection,death,treatment ,தேனி மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

அதுபோல், தேனி அரசு மருத்துவ கல்லூரி பயிற்சி டாக்டர், ராஜதானி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் பெண் டாக்டர், சின்னமனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், தென்கரை, ஜெயமங்கலம் போலீஸ் நிலையங்களில் தலா ஒரு போலீசார், தேனி அல்லிநகரம் நகராட்சி ஊழியர்கள் 2 பேர் ஆகியோர் உள்பட நேற்று ஒரே நாளில் 59 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,975 ஆக அதிகரித்து உள்ளது.

இந்நிலையில் தேனியில் இன்று ஒரே நாளில் 130 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,105 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 724 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Tags :
|