Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவை 19 பெயர்களால் அழைக்க முடியும் - தேர்தல் பிரசார கூட்டத்தில் டிரம்ப் ஆவேசம்

கொரோனாவை 19 பெயர்களால் அழைக்க முடியும் - தேர்தல் பிரசார கூட்டத்தில் டிரம்ப் ஆவேசம்

By: Karunakaran Mon, 22 June 2020 11:56:57 AM

கொரோனாவை 19 பெயர்களால் அழைக்க முடியும் - தேர்தல் பிரசார கூட்டத்தில் டிரம்ப் ஆவேசம்

அமெரிக்காவில் நவம்பர் 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளதால் இந்த தேர்தல் நடைபெறுமா என சந்தேகம் இருந்தது. ஆனால் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் என அதிபர் டிரம்ப் அதிகாரபூர்வமாக தெரிவித்தார். இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதியான ஜோ பிடன் போட்டியிடுகிறார்.

தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், தேர்தலுக்கான வேலைகள் மும்மரமாக நடைபெறுகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் ஓக்லஹோமா மாகாணத்தில் துல்சா நகரில் நடைபெற்ற முதல் தேர்தல் பிரசார கூட்டத்தில் ஜனாதிபதி டிரம்ப் கலந்து கொண்டு பேசினார்.

election campaign,donald trump,corona virus,america ,கொரோனா, டிரம்ப்,தேர்தல் பிரசார கூட்டம்,ஜோ பிடன்

அப்போது பேசிய அவர், கொரோனா வைரஸ் தொற்று ஒரு நோய்தான். இதை இதுவரை வரலாற்றில் இல்லாத வகையில் வேறு எந்த நோயையும்விட பல்வேறு பெயர்களால் அழைக்க முடியும். நான் குங் புளூ என்று அழைப்பேன். அதன் 19 வெவ்வேறு பதிப்புகளையும், வெவ்வேறு பெயரிட்டு அழைப்பேன். பலர் இதை வைரஸ் என்று அழைக்கிறார்கள். அது வைரஸ்தான். எங்களிடம் 19 அல்லது 20 வெவ்வேறு பெயர்கள் இருக்கின்றன என்று ஆவேசமாக கூறினார்.

கொரோனா வைரஸ் தொற்று விவகாரத்தில் சீனாவை தொடர்ந்து டிரம்ப் குற்றம்சாட்டிவருகிறார். மேலும், ஆரம்பத்தில் இந்த நோய் பற்றிய தகவல்களை உரிய நேரத்தில் வெளியிடாமல் சீனா மறைத்து விட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால் டிரம்பின் செல்வாக்கு அமெரிக்காவில் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :