Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா ஊரடங்கால் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வியில் பின் தங்கும் அபாயம்

கொரோனா ஊரடங்கால் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வியில் பின் தங்கும் அபாயம்

By: Nagaraj Sun, 02 Aug 2020 12:00:28 PM

கொரோனா ஊரடங்கால் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வியில் பின் தங்கும் அபாயம்

தமிழகம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட சிறப்பு பள்ளிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வை திறன், காது கேட்கும் திறன் பாதிப்பு மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் கல்வியில் பின் தங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட சிறப்பு பள்ளிகளில் பட்ட மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் படித்து வந்தனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக நீண்ட காலமாக கல்வி கற்காமல் மாற்றுத்திறனாளி மாணவர்கள் இருப்பதால் அவர்கள் கல்வியில் பின் தங்கி கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:

கொரோனாவால் அமல்படுத்தப்பட்டு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் போன்றவற்றின் மூலம் கல்வி கற்றுத்தரப்படுகிறது. காது கேட்கும் திறன் பாதிக்கப்பட்ட திருநாளில் மாணவர்களுக்கு புரியும் வகையில் சைகை மொழியில் பாடல்களை விளக்குவதில்லை.

transgender,educational television,students,emphasis ,மாற்றுத்திறனாளி, கல்வி தொலைக்காட்சி, மாணவர்கள், வலியுறுத்தல்

பார்வை திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி மாணவர்களைப் பொருத்தவரை டெய்லி முறையில் மட்டுமே முடியும். இவர்கள் தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் முறையில் கல்வி கற்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஏற்ற வகையில் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப வேண்டும்.

இவர்களுக்கு நீண்ட நாட்களுக்கு கல்விகற்று தராவிட்டால் அவர்களை மீண்டும் படிப்பில் வரவைப்பது மிகுந்த சிரமமாக மாறி விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது. கல்வியில் பின்தங்கிய கூடிய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

கல்வி தொலைக்காட்சியில் அனைத்து நிகழ்ச்சிகளையும் சைகை மொழியில் ஒளிபரப்பு அதற்கான பணிகள் முடிந்து நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பப்படும். பார்வைத்திறன் ஏற்கனவே ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் குரல் பதிவை கேட்டறிந்து வருகின்றனர். அதனால் கேள்வி கேட்பதில் சிக்கல் ஏதுமில்லை. கல்வி தொலைக்காட்சி மற்றும் ஆன்லைனில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஏற்றவாறு சிறு மாற்றங்களை செய்து கல்வி கற்பிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது விரைவில் அமுலுக்கு வரும். கொரோனோ பரவி வருவதால் தற்போதைக்கு வீடுகளுக்குச் சென்று பாடம் கற்றுத் தருவது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :