Advertisement

ஒடிசாவில் 50 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

By: Nagaraj Wed, 12 Aug 2020 2:21:11 PM

ஒடிசாவில் 50 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

50 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு... ஒடிசாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,876 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 50,000 கடந்தது.

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில், ஒடிசாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இது தொடர்பாக ஒடிசா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

department of health,report,odisha,50 thousand,examination ,சுகாதாரத்துறை, அறிக்கை, ஒடிசா, 50 ஆயிரம், பரிசோதனை

நேற்று (செவ்வாய்கிழமை) ஒரே நாளில் புதிதாக 1,876 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 50,672-ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 9 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு 305-ஆக உயர்ந்துள்ளது.

இதில் 4 பேர் கஞ்சம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். ராயகடாவைச் சேர்ந்த 2 பேர், அங்குல், பாலசோர், குர்தா மாவட்டங்களைச் சேர்ந்த தலா ஒருவர் உயிரிழந்தனர். 1,876 கொரோனா பாதிப்பில் 1,182 பேர் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் கண்டறியப்பட்டுள்ளனர். 694 பேர் தினசரி பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக குர்டா (297), கஞ்சம் (260), சுந்தர்கார் (119), கட்டாக் (109) ஆக உள்ளது என்று சுகாதாரத்துறை அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|