Advertisement

மும்பையில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்குகிறது

By: Nagaraj Wed, 04 Nov 2020 09:05:25 AM

மும்பையில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்குகிறது

மும்பையில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்குகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மராட்டிய மாநிலத்தில், பாதிப்பு எண்ணிக்கை 17 லட்சத்தை நெருங்கிய வரும் நிலையில், தலைநகர் மும்பையில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,59,860 ஆக அதிகரித்துள்ளதாக மும்பை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

mumbai,corona,healed,3 lakh,vulnerable ,மும்பை, கொரோனா, குணமடைந்தனர், 3 லட்சம், பாதிப்பு

இதில் மும்பையில் நேற்று ஒரே நாளில் 746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நேற்று கொரோனா தொற்றுக்கு 15 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 10,320 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 939 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் இதுவரை 2,31,541 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Tags :
|
|
|
|