Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாணவர்கள் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு; தென்கொரியாவில் மீண்டும் பள்ளிகள் மூடல்

மாணவர்கள் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு; தென்கொரியாவில் மீண்டும் பள்ளிகள் மூடல்

By: Nagaraj Wed, 20 May 2020 9:28:25 PM

மாணவர்கள் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு; தென்கொரியாவில் மீண்டும் பள்ளிகள் மூடல்

தென் கொரியாவில் பள்ளி மாணவர்கள் 2 பேருக்கு கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டதால் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக பல நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது தளர்வுகள் அறிவிக்கப்படுகிறது. ஆனால் ஜெர்மனி, சீனா மற்றும் தென்கொரியா போன்ற சில நாடுகள் நோய் பாதிப்புகளை வென்று இயல்புநிலைக்கு திரும்பியது. ஆனால் தற்போது மீண்டும் நோய் பரவ துவங்கிவிட்டது.

இந்நிலையில் தென்கொரியாவில் பள்ளி மாணவர்கள் 2 பேருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது தொடர்பாக அந்நாட்டின் ஊடகங்கள் கூறுகையில், தென் கொரியாவில் கொரோனா பாதிப்பால் மூடப்பட்ட பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. பள்ளிக்குள் நுழையும் முன் மாணவர்களின் உடல் வெப்பநிலையை சோதித்த பிறகுதான் வகுப்பறைக்கு செல்ல அனுமதிக்கப்படுவர்.

south korea,schoolchildren,corona,vulnerability,closure ,தென்கொரியா, பள்ளி மாணவர்கள், கொரோனா, பாதிப்பு, மூடல்

இந்நிலையில் பரிசோதனையில் 2 மாணவர்களுக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டது. நோய் அச்சுறுத்தலால் மற்ற மாணவர்களும் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இவ்வாறு கூறியிருந்தது.

தென்கொரியாவில் நோய் பரவலையடுத்து இணைய தளம் மூலமாக மாணவர்கள் கல்வி பயின்றனர். பின் சில பாதுகாப்பு விதிமுறைகளுடன் பள்ளிகள் திறக்க அரசு அனுமதியளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தென்கொரியாவில் தற்போது 11,110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 263 பேர் தொற்று காரணமாக பலியாகி உள்ளனர்.

Tags :
|