Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை விமான நிலைய ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு; 7ம் தேதி வரை விழுந்தது பூட்டு

சென்னை விமான நிலைய ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு; 7ம் தேதி வரை விழுந்தது பூட்டு

By: Nagaraj Fri, 05 June 2020 12:43:45 PM

சென்னை விமான நிலைய ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு; 7ம் தேதி வரை விழுந்தது பூட்டு

ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து வரும் 7ம் தேதி வரை சென்னை விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக 2 மாதங்களுக்கும் மேலாக முடக்கப்பட்டிருந்த உள்நாட்டு விமான போக்குவரத்து சேவையானது, மே 25ம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

விமானம் மூலம் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து யார் வந்தாலும், அவர்களுக்கு விமான நிலையத்தில் உடல் வெப்பநிலை சோதனை செய்யப்பட வேண்டும். அதன்பின்னர் அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது.

chennai,airport,staff,corona,innovation ,சென்னை, விமான நிலையம், ஊழியர்கள், கொரோனா, கண்டுபிடிப்பு

இதனிடையே, வெளிநாடு வாழ் இந்தியர்களை அழைத்துவரும் வந்தே பாரத் மிஷன் நடவடிக்கையை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந் நிலையில், சென்னை விமான நிலைய ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனால், வரும் 7ம் தேதி வரை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்படுவதற்காக மூடப்படுவதாக இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags :
|
|