Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பூமி பூஜையில் கலந்து கொண்ட ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளையின் தலைவருக்கு கொரோனா பாதிப்பு

பூமி பூஜையில் கலந்து கொண்ட ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளையின் தலைவருக்கு கொரோனா பாதிப்பு

By: Karunakaran Thu, 13 Aug 2020 4:01:17 PM

பூமி பூஜையில் கலந்து கொண்ட ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளையின் தலைவருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த கொரோனா பரவலுக்கு மத்தியில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை கடந்த ஐந்தாம் தேதி நடைபெற்றது. கொரோனா காரணமாக முக்கிய தலைவர்கள் 125 பேருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

பிரதமர் மோடி, உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், கவர்னர், ஆர்எஸ்எஸ் தலைவர் போன்ற முக்கிய தலைவர்கள் இந்த பூமி பூஜையில் கலந்து கொண்டனர். இந்த ராமர் கோவில் கட்டுவதற்காக ஒரு அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது. ராம் மந்திர் என்ற அறக்கட்டளையின் தலைவராக நித்ய கோபால் தாஸ் உள்ளார்.

corona damage,head of the foundation,ram temple,bhoomi puja ,கொரோனா சேதம், அறக்கட்டளையின் தலைவர், ராம் கோயில், பூமி பூஜை

ராம் மந்திர் என்ற அறக்கட்டளையின் தலைவராக நித்ய கோபால் தாஸ் பூமி பூஜை விழாவில் கலந்து கொண்டார். தற்போது நித்ய கோபால் தாஸ் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். விழா முடிந்து ஒரு வாரம் ஆன நிலையில் அவருக்கு தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நித்ய கோபால் தாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மதுரா மாவட்ட கலெக்டரிடம் பேசிய யோகி ஆதித்யநாத், மெதந்தா மருத்துவமனை டாக்டரை தொடர்பு கொண்டு. நித்ய கோபால் தாஸ் மருத்துவ சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

Tags :