Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஸ்பெயினில் சில நாட்களாக கொரோனா இறப்பு எற்படவில்லை - சுகாதாரத் துறை

ஸ்பெயினில் சில நாட்களாக கொரோனா இறப்பு எற்படவில்லை - சுகாதாரத் துறை

By: Monisha Thu, 11 June 2020 6:11:12 PM

ஸ்பெயினில் சில நாட்களாக கொரோனா இறப்பு எற்படவில்லை - சுகாதாரத் துறை

சீனாவின் உகான் நகரிலிருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது கடும் சவாலாக உள்ளது

ஸ்பெயினில் கொரோனா தொற்றினால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்து வருகிறது ஆனால் தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுகுறித்து ஸ்பெயின் சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:-

coronavirus,spain,department of health,corona death,curfew ,கொரோனா வைரஸ்,ஸ்பெயின்,சுகாதாரத் துறை,கொரோனா இறப்பு,ஊரடங்கு

ஸ்பெயினில் சில நாட்களாக கொரோனா இறப்பு எற்படவில்லை. எனினும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 167 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை ஸ்பெயினில் 2,42,280 பேருக்கு கொ ரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 27,136 பேர் பலியாகி உள்ளனர். 1,50,000 பேர் குணமடைந்துள்ளனர். இவ்வாறு கூறினார்கள்.

ஸ்பெயினில் ஜூன் மாத இறுதி வரை நான்கு கட்டங்களாக ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளது. இதன் மூலம் ஸ்பெயினில் மார்ச் 14 ஆம் தேதி தொடங்கப்பட்ட ஊரடங்கு மே 4 ஆம் தேதி தளர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags :
|