Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 23 பேர் உயிரிழப்பு

சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 23 பேர் உயிரிழப்பு

By: Monisha Sat, 04 July 2020 1:16:21 PM

சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 23 பேர் உயிரிழப்பு

சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 23 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிதீவிரமாக பரவி வருகிறது. மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 2 ஆயிரத்து 721 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 42 ஆயிரத்து 955 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 58 ஆயிரத்து 378 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 1,385 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

chennai,coronavirus,influence,kills,treatment ,சென்னை,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

சென்னையில் 64 ஆயிரத்து 689 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து உள்ளனர். 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இதுவரை 996 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 23 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 9 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 6 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் தனியார் மருத்துவமனையில் ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார்.

Tags :
|