ஐ.எஸ் தீவிரவாதியை சிரியா சிறையில் இருந்து கனடாவுக்கு திருப்பி அனுப்ப முடிவு
By: Nagaraj Tue, 24 Jan 2023 10:53:30 AM
பிரிட்டன்: கனடாவுக்கு அனுப்ப முடிவு... பிரிட்டனில் பிறந்த ஐ.எஸ் தீவிரவாதியை சிரியா சிறையில் இருந்து கனடாவுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடா மற்றும் பிரிட்டன் இரட்டை குடியுரிமை கொண்ட 28 வயது ஜாக் லெட்ஸ் தற்போது வடகிழக்கு சிரியாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவருடன் மேலும் 22 கைதிகளுடன் கனடாவுக்கு திருப்பி அனுப்ப முடிவாகியுள்ளது.
பிரிட்டனுக்கு திரும்ப தம்மை அனுமதிக்க வேண்டும் எனவும், பிரிட்டன் மக்களை திட்டமிட்டு தாம் கொல்லவில்லை எனவும் ஜாக் லெட்ஸ் கெஞ்சிய பின்னரும் 2019ல் பிரிட்டன் அரசு அவரது குடியுரிமையை ரத்து செய்தது.
2014ல் தாம் சிரியாவுக்கு புறப்பட்ட பின்னர் பிரிட்டன் தம்மை எதிரியாகவே பாவித்தது என்கிறார் ஜாக் லெட்ஸ். இதனிடையே, கனடா பெடரல் நீதிமன்றம் தெரிவிக்கையில், அரசாங்கம் துரித நடவடிக்கை முன்னெடுத்து சிரியா சிறையில் வாடும் நான்கு கனேடிய பிரஜைகளை மீட்டு வரவேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் தோல்வியை தழுவிய நிலையில், ஆயிரக்கணக்கான வெளிநாட்டு ஐ.எஸ் போராளிகள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். பல நாடுகள் தங்கள் பிரஜைகளை மீட்டுவர நடவடிக்கைகள் முன்னெடுத்து வருகிரது. ஆனால் பிரிட்டன் மட்டும் இந்த விவகாரத்தில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை என்றே கூறப்படுகிறது.