Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திண்டுக்கல்லில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 131 ஆக அதிகரிப்பு

திண்டுக்கல்லில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 131 ஆக அதிகரிப்பு

By: Monisha Fri, 04 Sept 2020 5:33:07 PM

திண்டுக்கல்லில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 131 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, கோவை, கடலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று அதிகமாக உள்ளது.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு ஆஸ்பத்திரி, எம்.வி.எம். கல்லூரி, பழனி மற்றும் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் காந்தி கிராம பல்கலைக்கழக வளாகத்தில் சித்த மருத்துவ பிரிவும் இயங்கி வருகிறது.

dindigul,corona virus,infection,death,treatment ,திண்டுக்கல்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

நேற்று முன்தினம் வரை 6,939 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் 5,857 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 951 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் புதிதாக மேலும் 133 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. நேற்று 74 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

திண்டுக்கல்லில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2 பேர் நேற்று உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 131 ஆக அதிகரித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 2-ம் கட்ட ஊரடங்கு தளர்வுக்கு பிறகுதான் கொரோனா பாதிப்பு கடுமையாக அதிகரித்தது. அதே போல் தற்போதும் போக்குவரத்து தொடங்கிய பின் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்காமல் இருக்க மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

Tags :
|