Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஐரோப்பிய நாடுகளில் வரும் மாதங்களில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஐரோப்பிய நாடுகளில் வரும் மாதங்களில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

By: Karunakaran Tue, 15 Sept 2020 3:39:22 PM

ஐரோப்பிய நாடுகளில் வரும் மாதங்களில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி வருகிறது. உலக அளவில் கொரோனா வைரஸ் அதிகம் பரவியவர்களை கொண்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வேகமாக பரவி வந்தது. கடந்த சில மாதங்களாக ஐரோப்பிய நாடுகளில் கொரோனா கட்டுக்குள் இருந்தது. இதனால் அமலில் இருந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியது.

இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக பிரான்ஸ் நாட்டில் தினமும் சராசரியாக 5 ஆயிரம் பேர், இங்கிலாந்தில் 2 ஆயிரம் பேர், ஸ்பெயினில் 3 ஆயிரம் பேர், ஜெர்மனியில் 2 ஆயிரம் பேர், இத்தாலியில் 1 பேர் என்ற அளவில் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

corona death,european countries,world health organization,corona virus ,கொரோனா மரணம், ஐரோப்பிய நாடுகள், உலக சுகாதார அமைப்பு, கொரோனா வைரஸ்

55 ஐரோப்பிய நாடுகளில் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 51 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கம் ஏற்பட அதிக வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஐரோப்பாவில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் மீண்டும் அதிகரிக்கலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய கிளை இயக்குனர் ஹான்ஸ் கூறுகையில், இந்த சூழ்நிலை மிகவும் கடினமாகப்போகிறது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் நாம் மீண்டும் அதிக கொரோனா உயிரிழப்புகளை சந்திக்கப்போகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Tags :