Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா பரவல் உச்சநிலையை அடைவதை தடுக்க முடியாது - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கொரோனா பரவல் உச்சநிலையை அடைவதை தடுக்க முடியாது - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

By: Monisha Wed, 24 June 2020 10:40:21 AM

கொரோனா பரவல் உச்சநிலையை அடைவதை தடுக்க முடியாது - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் எப்படி இருக்கும்? எத்தனை பேருக்கு தொற்று பரவும்? எத்தனை உயிரிழப்புகள் ஏற்படும்? போன்றவை குறித்து ஆய்வுகளை மேற்கொண்டனர். இந்த ஆய்வு முடிவில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது.

சென்னையில் கொரோனா தொற்று அக்டோபர் மாதம் உச்சநிலையை அடையும். தொற்று தவிர்ப்பு செயல்பாடுகளை மக்கள் பின்பற்றுவதைப் பொறுத்தே கொரோனாவின் 2-வது எழுச்சி முடிவுக்கு வரும். தற்போது சென்னை மற்றும் சில மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு, கொரோனா உச்ச நிலையை அடையும் வேகத்தை 2 அல்லது 3 வாரங்களுக்கு குறைக்கலாம். அக்டோபர் மாத இறுதியில் அல்லது நவம்பர் மாத தொடக்கத்தில் கொரோனா பரவல் உச்சநிலையை எட்டும் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

research,coronavirus,tamil nadu,chennai,dr mgr medical university ,ஆய்வு,கொரோனா வைரஸ்,தமிழ்நாடு,சென்னை,டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம்

இன்னும் சில வாரங்களில் வேறு சில மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும். அதன்படி, அடுத்த ஜூலை மாதம் மத்தியில் தமிழகத்தில் 2.70 லட்சம் மக்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்கும் என்றும், இதில் 60 சதவீத தொற்று சென்னையில் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது. சென்னையில், ஜூன் மாத இறுதியில் 71 ஆயிரம் பேருக்கு தொற்று பரவி இருக்கும். இந்த எண்ணிக்கை ஜூலை 15-ந் தேதியளவில் 1.5 லட்சமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இம்மாதம் ஜூன் 30-ந் தேதியில் சென்னையில் கொரோனா பாதிப்பு 71 ஆயிரத்து 24, தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 22 ஆயிரத்து 499 ஆகவும், ஜூலை 1-ந் தேதியில் சென்னையில் 71 ஆயிரத்து 714, தமிழகத்தில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 341 ஆகவும், ஜூலை 15-ந் தேதியில் சென்னையில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 244, தமிழகத்தில் 2 லட்சத்து 76 ஆயிரத்து 281 ஆகவும் பரவ வாய்ப்பு உள்ளது.

research,coronavirus,tamil nadu,chennai,dr mgr medical university ,ஆய்வு,கொரோனா வைரஸ்,தமிழ்நாடு,சென்னை,டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம்

சென்னையில் கொரோனா தொற்றினால் ஏற்படும் இறப்பும் இரட்டிப்பாகும். அதன்படி, ஜூலை மாத மத்தியில் சென்னையில் 1,654 இறப்புகளும், தமிழகம் முழுவதும் இறப்பு எண்ணிக்கை 3,072 ஆக இருக்கும். சென்னையில் கொரோனா தொற்று உச்ச நிலையை அடைந்ததும் சில வாரங்களில் படிப்படியாக இறங்கத் தொடங்கும்.

கொரோனா பரவல் உச்சநிலையை அடைவதை தடுக்க முடியாது என்றாலும் ஊரடங்கு நடவடிக்கைகள், உச்சநிலையை எட்டும் காலகட்டத்தை தாமதப்படுத்தும். இவ்வாறு ஆய்வில் தெரியவந்துள்ளது.

Tags :