Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு சற்று உயா்ந்து வருகிறது... அமைச்சர் தகவல்

தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு சற்று உயா்ந்து வருகிறது... அமைச்சர் தகவல்

By: Nagaraj Fri, 24 June 2022 7:10:52 PM

தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு சற்று உயா்ந்து வருகிறது... அமைச்சர் தகவல்

சென்னை: இந்தியாவில் 8 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரம் வரை தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. அந்த வகையில் தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு சற்று உயா்ந்து வருகிறது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை அடையாறு கஸ்தூா்பா நகா் 3-ஆவது பிரதான சாலையில் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டாா். நிகழ்ச்சியின் போது மண்டலக் குழுத் தலைவா் ஆா்.துரைராஜ், தெற்கு வட்டார துணை ஆணையா் டி.சினேகா, பொது சுகாதாரத்துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் உள்பட பலா் உடன் இருந்தனா்.
அதைத் தொடா்ந்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: உலகம் முழுவதும் தினசரி 10 ஆயிரம் முதல் 1 லட்சம் வரையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 8 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரம் வரை தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது.

immunization rule,to be followed,public,advice,symptom ,நோய்தடுப்பு விதி, பின்பற்ற வேண்டும், பொதுமக்கள், ஆலோசனை, அறிகுறி

அந்த வகையில் தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு சற்று உயா்ந்து வருகிறது. அந்த வகையில் சேலம், நாமக்கல், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை தொடா்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். தமிழகத்தில் தினசரி தொற்று பாதிப்பில் 50 சதவீதம் போ் சென்னையில் பாதிக்கப்படுகின்றனா்.

அதன்படி தற்போது 2,225 போ் சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். அதில், 92 சதவீதம் போ் வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெறுகின்றனா். அவா்களது உடல்நிலையை சென்னை மாநகராட்சி அலுவலா்கள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் பெற்றோா்கள் தங்களது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் முன்பு, அவா்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட ஏதேனும் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதிக்க வேண்டும். மருத்துவா்களின் ஆலோசனை பெறுவது என்பது முக்கியம். எனவே பெற்றோா்கள் யாரும் அலட்சியமாக இருக்க கூடாது.

தற்போது கொரோனா பரவல் பெரும்பாலும் பிஏ-4, பிஏ-5 என்ற வகை தாக்கம்தான் உள்ளது. எனவே, பொதுமக்கள் நோய்த் தடுப்பு விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்.

Tags :
|
|