Advertisement

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 60 லட்சத்தை கடந்தது

By: Nagaraj Thu, 27 Aug 2020 11:48:26 AM

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 60 லட்சத்தை கடந்தது

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 44,637 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 60 லட்சத்தை தாண்டியது.

உலக நாடுகள் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. முதலில் தொற்று பரவிய ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டாலும் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷியா போன்ற நாடுகளில் தொற்று பரவல் வேகமாக உள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

new york,california,60 million,corona,vulnerability ,நியூயார்க், கலிபோர்னியா, 60 லட்சம், கொரோனா, பாதிப்பு

அதன்படி, வியாழக்கிழமை காலை நிலவரப்படி, மேலும் புதிதாக 44,637 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 60,00,365ஆக அதிகரித்துள்ளது. மேலும், அதே கால அளவில் 1,289 உயிரிழந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,83,653 கோடியைக் கடந்தது. அதே நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து 33,13,861 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதிகமான தொற்று பாதிக்கப்பட்ட மாகாணமாக கலிபோர்னியா உள்ளது. அங்கு இதுவரை 6,87,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 12,550 பேர் பலியாகியுள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக, டெக்சாஸில் 6,21,673 பேரும், புளோரிடாவில் 6,08,722 பேரும், நியூயார்க்கில் 4,62,294 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags :
|