Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 104 பேருக்கு கொரோனா உறுதி

திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 104 பேருக்கு கொரோனா உறுதி

By: Monisha Mon, 22 June 2020 1:37:46 PM

திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 104 பேருக்கு கொரோனா உறுதி

திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே 2,534 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 104 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் மாநிலத்தில் புதிதாக 2 ஆயிரத்து 532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 59 ஆயிரத்து 377 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 25 ஆயிரத்து 863 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 32 ஆயிரத்து 754 பேர் குணமடைந்துள்ளனர்.

tamil nadu,coronavirus,vulnerability,thiruvallur district,infection ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பாதிப்பு,திருவள்ளூர் மாவட்டம்,தொற்று

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 41,172 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே 2,534 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 104 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,638 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,240 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திருவள்ளூர் மாவட்டம் உட்பட 4 மாவட்டங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :