சென்னையில் ஒரே நாளில் 5 மண்டலங்களில் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா
By: Nagaraj Sun, 07 June 2020 8:02:08 PM
5 மண்டலங்களில் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா... சென்னையில், தண்டையார்ப்பேட்டை, ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க., நகர், தேனாம்பேட்டை மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
சென்னையில் நேற்று 1,145 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,993 ஆக அதிகரித்துள்ளது. 197 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனா பாதிப்பை மண்டல வாரியாக மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில் ராயபுரம் பகுதி 3, 717 பேருடன் முதலிடத்தில் உள்ளது. தண்டையார்ப்பேட்டை, தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், திரு.வி.க.நகர் மண்டலங்களிலும் தலா 2 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்ணா நகர், அடையாறு வளசரவாக்கம் மண்டலங்களில் தலா ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.மண்டவ வாரியாக பாதிப்பு விவரம் அபராதம் வசூல் போலீசார் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 5,94, 681 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,887 பேர் கைதாகி விடுவிக்கப்பட்டனர். ஊரடங்கை மீறியதாக 4,53,050 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 5,53, 431 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 10 கோடியே 68 லட்சத்து 13 ஆயிரத்து 234 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சிறப்பு ஒருங்கிணைப்பாளர் நியமனம் சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களது பணியை கண்காணித்து, ஒருங்கிணைக்க அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள சிறப்பு ஒருங்கிணைப்பாளராக நில நிர்வாக ஆணையரான மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி பங்கஜ் குமார் பன்சால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.