Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • துபாயில் இருந்து மங்களூர் வந்தவர்களில் 20 பேருக்கு கொரோனா

துபாயில் இருந்து மங்களூர் வந்தவர்களில் 20 பேருக்கு கொரோனா

By: Nagaraj Fri, 15 May 2020 9:40:15 PM

துபாயில் இருந்து மங்களூர் வந்தவர்களில் 20 பேருக்கு கொரோனா

துபாயில் இருந்து வந்தவர்கள் 20 பேருக்கு கொரோனா... துபாயில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் மங்களூருக்கு வந்த பயணிகளில் கர்நாடகாவை சேர்ந்த 20 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. நோய் பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. கடந்த 3 நாட்களுக்கு முன் 179 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் மூலம் துபாயில் இருந்து மங்களூரு (கர்நாடகா) வந்தடைந்தது.

மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் (Mangaluru International Airport) பயணிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் பாதுகாப்பு கருதி 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

dubai,count,corona damage,karnataka ,துபாய், எண்ணிக்கை, கொரோனா பாதிப்பு, கர்நாடகா

இது தொடர்பாக டிகே மாவட்ட துணை ஆணையர் சிந்து பி ரூபேஷ்கூறுகையில், மாவட்ட தலைமையகமான டி.கே.யில் இருந்து 125 பயணிகளின் சோதனை முடிவுகள் பெறப்பட்டுள்ளன, அவர்களில் 15 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.

கொரோனா சோதனைகள் 12 நாட்களுக்குப் பிறகு மீண்டும் செய்யப்படும். இங்குள்ள 15 நோயாளிகள் வென்லாக் மருத்துவமனையிலும், ஐந்து பேர் டி.எம்.ஏ பை மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மே 18 அன்று துபாயில் இருந்து அடுத்த நாடு திரும்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் விமான நிலையத்தில் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு கூறினார்.

dubai,count,corona damage,karnataka ,துபாய், எண்ணிக்கை, கொரோனா பாதிப்பு, கர்நாடகா

கொரோனா ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள், 'வந்தே பாரத்' திட்டத்தின் மூலம் சொந்த ஊருக்கு அழைத்து வரப்படுகின்றனர். இதன் கீழ் 3 நாட்களுக்கு முன் (மே.,12) இங்கு வந்த முதல் விமானத்தில் 38 கர்ப்பிணி பெண்கள் மற்றும் 12 மருத்துவ அவசர பணியாளர்கள் உட்பட 179 பேர் சென்றனர். இந்நிலையில் சூரத்கலை சேர்ந்த சுவாசகோளாறு காரணமாக சிகிச்சையில் இருந்த பெண்ணுக்கு இன்று கொரோனா தொற்று உறுதியானது.

இதனால் டி.கே மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆக உயர்ந்தது. அதையொட்டி, கடந்த 1 மாதமாக பாதிப்பு ஏதும் இல்லாத உடுப்பியில் 5 பேர் புதிதாகபாதிக்கப்பட்டனர். டி.கே மாவட்டத்தில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 29 ஆகவும், பலியானவர்கள் 5 பேர் எனவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags :
|
|