Advertisement

நாகையில் அரசு டாக்டர் உட்பட 4 டாக்டர்களுக்கு கொரோனா

By: Nagaraj Mon, 29 June 2020 10:10:19 AM

நாகையில் அரசு டாக்டர் உட்பட 4 டாக்டர்களுக்கு கொரோனா

நாகையில் அரசு மருத்துவர் உட்பட நான்கு மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் சென்னையில் தான் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக பிற மாவட்டங்களிலும் தொற்று அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பிற மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

doctors,nurses,people,fears,corona ,மருத்துவர்கள், செவிலியர், மக்கள், அச்சம், கொரோனா

இந்நிலையில், நாகை மாவட்டத்தில் நேற்று புதிதாக 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் அரசு மருத்துவக் கல்லூரியை சேர்ந்த இரண்டு மருத்துவர்கள், ஒரு பெண் செவிலியர் அடங்குவர்.

இதேபோன்று தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் நாகை மாவட்டத்தில் நேற்று மட்டும் மொத்தமாக 16 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இதுவரை நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 250 ஆக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில் நாகையில் கொரோனா பாதிப்பு குறைந்து இருந்தாலும் நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்படுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Tags :
|
|
|