பாரீஸில் ஒவ்வொரு 30 விநாடிக்கும் ஒருவருக்கு கொரோனா
By: Nagaraj Wed, 04 Nov 2020 09:06:01 AM
பிரான்ஸ் அரசு தகவல்... பாரீஸில் ஒவ்வொரு 30 விநாடிக்கும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாவதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரான்ஸும் ஒன்று. அங்கு 14,66,433 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், 37,435 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பிரான்ஸில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததையடுத்து மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் பாரிஸ் தலைநகர் பிரான்ஸில் ஒவ்வொரு 30 விநாடிக்கும் ஒரு
நபருக்கு கொரோனா தொற்று ஏற்படுவதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர்
ஆலிவர் வேரன் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு நபர்
தொற்று காரணமாக மருத்துவமனையை அடைவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதனால்
ஊரடங்கில் எந்த தளர்வுகள் கொண்டு வந்தாலும், மக்களுக்கு ஆபத்தாக
முடிந்துவிடும் என தெரிவித்துள்ளார். மக்களை காப்பாற்ற வேண்டியது தங்கள்
கடமை என்றும் அமைச்சர் ஆலிவர் வேரன் கூறியுள்ளார்.