Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குறை மாதத்தில் பிறந்த குழந்தைக்கு கொரோனா... மருத்துவர்கள் தீவிர சிகிச்சையில் குணமடைந்தது

குறை மாதத்தில் பிறந்த குழந்தைக்கு கொரோனா... மருத்துவர்கள் தீவிர சிகிச்சையில் குணமடைந்தது

By: Nagaraj Wed, 16 Sept 2020 4:26:37 PM

குறை மாதத்தில் பிறந்த குழந்தைக்கு கொரோனா... மருத்துவர்கள் தீவிர சிகிச்சையில் குணமடைந்தது

கொரோனாவிலிருந்து மீண்ட குறை மாதத்தில் பிறந்த குழந்தை... 980 கிராம் எடையுடன் குறைமாதத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு, பிறந்த சில நாள்களில் கொரோனா உறுதி செய்யப்பட்டு, பலகட்ட சிகிச்சைகளுக்குப் பின், தற்போது பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளது.

நாட்டிலேயே இதுவரை மிகக் குறைவான உடல் எடையுடன் பிறந்த குழந்தைக்கு கொரோனா பாதித்து அதில் இருந்து மீண்டிருப்பது இதுவே முதல் முறை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

குறைமாதத்தில், மிகக் குறைந்த உடல் எடையுடன் பிறந்த பெண் குழந்தை, ஆகஸ்ட் 13-ல் வாணி விலாஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. பிறந்த ஐந்து நாள்களுக்குப் பின் குழந்தைக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. உடனடியாக குழந்தை விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. பல்வேறு உடல் நலப் பிரச்னைகளால் குழந்தை அவதிப்பட்டது. பலகட்ட சிகிச்சைகளும் அளிக்கப்பட்டது.

premature baby,corona,perfect health,parents ,குறைமாதம் குழந்தை, கொரோனா, பூரண நலம், பெற்றோர்

தாய் பால் கொடுக்கவும், குழந்தைக்கு உணர்வுப்பூர்வமான ஆறுதலை அளிக்கவும் அவரது தாய் மட்டும் குழந்தையுடன் சில மணி நேரம் செலவிட அனுமதிக்கப்பட்டிருந்தார். குழந்தைக்கு ரத்தத்தில் குறைவான சர்க்கரைப் பிரச்னையும் இருந்தது. மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பு காரணமாக குழந்தை கொரோனாவிலிருந்து மீண்டது. தொடர்ந்து உடல் எடைக் குறைவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்போது குழந்தை பூரண நலம் பெற்று 1.2 கிலோ உடல் எடையுடன் வீடு திரும்பியுள்ளது. குழந்தைக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை தேவை என்பது பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :
|