Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருப்பதி கோவிலில் பணியாற்றும் 91 ஊழியர்களுக்கு கொரோனா

திருப்பதி கோவிலில் பணியாற்றும் 91 ஊழியர்களுக்கு கொரோனா

By: Nagaraj Sun, 12 July 2020 9:43:25 PM

திருப்பதி கோவிலில் பணியாற்றும் 91 ஊழியர்களுக்கு கொரோனா

91 ஊழியர்களுக்கு கொரோனா... திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பணியாற்றும் 91 தேவஸ்தான ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புள்ளதாக தேவஸ்தான நிர்வாகி தெரிவித்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோவில் கடந்த மாதம் 11ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதிக்கப்பட்டு நாளொன்றுக்கு 10 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பேட்டி அளித்த தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், கடந்த ஒரு மாதத்தில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து கொண்ட நிலையில் 55 ஆயிரம் வெளிமாநில பக்தர்கள் கோவிலுக்கு வர முடியவில்லை.

andhra,tirupati temple,devasthanam,rs 15 crore donation ,ஆந்திரா, திருப்பதி கோவில், தேவஸ்தானம், ரூ.15 கோடி காணிக்கை

கடந்த ஒரே மாதத்தில் 15 கோடியே 80 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது. என அவர் தெரிவித்தார். மேலும் கோவிலில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இதில் தற்போது வரை 91 ஊழியர்களுக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு முழுவதுமாக கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து பக்தர்கள் வரவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்

Tags :
|