Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா பிடியில் சிக்கி தவிக்கிறது பிரேசில்; பாதித்தோர் எண்ணிக்கை 13.70 லட்சமாக உயர்வு

கொரோனா பிடியில் சிக்கி தவிக்கிறது பிரேசில்; பாதித்தோர் எண்ணிக்கை 13.70 லட்சமாக உயர்வு

By: Nagaraj Tue, 30 June 2020 09:38:46 AM

கொரோனா பிடியில் சிக்கி தவிக்கிறது பிரேசில்; பாதித்தோர் எண்ணிக்கை 13.70 லட்சமாக உயர்வு

பிரேசிலில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்போது வரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 58 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

brazil,vulnerable,corona,victims ,பிரேசில், பாதிப்பு, கொரோனா, பலியானவர்கள்

அமெரிக்காவை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் உள்ள பிரேசில் நாட்டில் கொரோனாவின் தாக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், பிரேசில் நாட்டில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 13.70 லட்சத்தைக் கடந்துள்ளது.

பிரேசிலில் கடந்த சில நாட்களாக 20 முதல் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. பிரேசிலில், ஒரே நாளில் 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதையடுத்து, அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 13 லட்சத்து 70 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 58 ஆயிரத்து 385 ஆக உயர்ந்துள்ளது.

Tags :
|
|