Advertisement

கொரோனாவால் கடந்த ஒரே நாளில் கனடாவில் 336 பேர் பாதிப்பு

By: Nagaraj Thu, 20 Aug 2020 7:57:32 PM

கொரோனாவால் கடந்த ஒரே நாளில் கனடாவில் 336 பேர் பாதிப்பு

கனடாவில் கடந்த ஒரே நாளில் கொரானாவால் 336 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 24ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 23ஆயிரத்து 490பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 9ஆயிரத்து 49பேர் உயிரிழந்துள்ளனர்.

corona,vulnerability,anxiety,treatment,survivors ,
கொரோனா, பாதிப்பு, கவலைக்கிடம், சிகிச்சை, உயிரிழந்துள்ளனர்

மேலும், நான்காயிரத்து 619பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, ஒரு இலட்சத்து ஒன்பதாயிரத்து 822பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுதவிர, 61பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags :
|