Advertisement

நாடு முழுவதும் 5,676 பேருக்கு கொரோனா

By: vaithegi Tue, 11 Apr 2023 11:55:18 AM

நாடு முழுவதும் 5,676 பேருக்கு கொரோனா

இந்தியா: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,676 பதிவாகியுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 37,093 ஆக பதிவாகியுள்ளது.

இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,31,000 ஆக உள்ளது. இதுவரை மட்டும் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,42,00,079 ஆக பதிவாகியுள்ளது.

corona,india ,கொரோனா,
இந்தியா

நாடு முழுவதும் இதுவரை மட்டும் 220,66,23,885 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 358 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எனவே கொரோனா பாதிப்பு அதிகமாகி கொண்டு வருவதால், மக்கள் அதிக கூடும் இடங்களில் முககவசம் அணியவும், தொற்றுக்கான அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்தி கொள்ளவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :
|