Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா இன்னும் மோசமான காலகட்டத்தை எட்டவில்லை - பில்கேட்ஸ்

கொரோனா இன்னும் மோசமான காலகட்டத்தை எட்டவில்லை - பில்கேட்ஸ்

By: Karunakaran Tue, 15 Dec 2020 10:51:49 AM

கொரோனா இன்னும் மோசமான காலகட்டத்தை எட்டவில்லை - பில்கேட்ஸ்

உலகின் பெரும் பணக் காரர்களில் ஒருவரான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ், பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேசன் என்ற அறக்கட்டளையின் இணைத்தலைவராகவும் இருக்கிறார். கொரோனா தடுப்பூசிகள் உருவாக்கும் பணிக்கு இந்த அறக்கட்டளை நிதிஉதவி அளித்து வருகிறது. இதுபோன்ற பெருந்தொற்று உலக அளவில் பரவும் என்று கடந்த 2015-ம் ஆண்டிலேயே பில்கேட்ஸ் கணித்திருந்தார்.

இந்நிலையில், பில்கேட்ஸ் பேட்டி அளித்தபோது, அடுத்த 4 முதல் 6 மாதங்களுக்கு கொரோனா தாக்கம், மிக மோசமாக இருக்கும். ஐ.எச்.எம்.இ. என்ற சுகாதார நிறுவனம், மேலும் 2 லட்சம்பேர் கொரோனாவுக்கு பலியாவார்கள் என்று கணித்துள்ளது. ஆகவே, முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற விதிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும். அப்படிச் செய்தால், பெருமளவு உயிரிழப்புகளை தவிர்க்கலாம். இன்னும் அதிக உயிரிழப்புகளை கொரோனா ஏற்படுத்தக்கூடும். கொரோனா இன்னும் மோசமான காலகட்டத்தை எட்டவில்லை என்று தெரிவித்தார்.

corona virus,worst period,billgates,world economy ,கொரோனா வைரஸ், மோசமான காலம், பில்கேட்ஸ், உலக பொருளாதாரம்

அமெரிக்காவிலும், பிற உலக நாடுகளிலும் நான் கணித்ததை விட கடுமையான பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சிக்கு எனது அறக்கட்டளை ஏராளமான நிதிஉதவி அளித்து வருகிறது. அமெரிக்க அரசுக்கு அடுத்தபடியாக நாங்கள்தான் அதிக நிதிஉதவி அளித்து வருகிறோம். கொரோனா தடுப்பூசியை போடுவதில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இருந்தாலும், மனித குலம் முழுமைக்கும் அமெரிக்கா உதவ வேண்டும் என பில்கேட்ஸ் கூறியுள்ளார்.

சர்வதேச ஒத்துழைப்பை தடுப்பது தவறு. அதனால், எல்லா கொரோனா தடுப்பூசிகளின் செயல்திறனையும் அதிகரிப்பது அவசியம். இனிவரும் மாதங்களில் மேலும் சில தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் கிடைத்து விடும். என்னுடைய முறை வரும்போது, நான் வெளிப்படையாகவே தடுப்பூசி போட்டுக்கொள்வேன். மருத்துவ தேவை அடிப்படையில்தான் ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி கிடைக்க வேண்டும். பணபலம் அடிப்படையில் கிடைக்கக்கூடாது. அனைவருக்கும் சமமாக தடுப்பூசி கிடைக்க வேண்டும். புதிய நிர்வாகத்தின்கீழ், அமெரிக்காவின் கொரோனா தடுப்பு செயல்பாடுகள் மோசமாக இருக்காது என்று கருதுகிறேன் என பில்கேட்ஸ் கூறினார்.


Tags :