Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா ஊரடங்கால் உலகம் முழுவதும் 160 கோடி மாணவர்கள் பாதிப்பு - ஆண்டனியோ குடரஸ்

கொரோனா ஊரடங்கால் உலகம் முழுவதும் 160 கோடி மாணவர்கள் பாதிப்பு - ஆண்டனியோ குடரஸ்

By: Karunakaran Wed, 05 Aug 2020 2:18:46 PM

கொரோனா ஊரடங்கால் உலகம் முழுவதும் 160 கோடி மாணவர்கள் பாதிப்பு - ஆண்டனியோ குடரஸ்

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. 8 மாத காலங்கள் ஆகியும் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்தபாடில்லை. இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.இருப்பினும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா பரவல் காரணமாக, உலகின் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

corona curfew,160 million student,world,antonio guterres ,கொரோனா ஊரடங்கு, 160 மில்லியன் மாணவர்கள், உலகம், அன்டோனியோ குடரெஸ்


இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் ஆண்டனியோ குடரஸ், கொரோனாவும், கல்வியும் குறித்து அளித்த பேட்டியில், உலகின் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால், உலகம் முழுவதும் 160 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2 கோடியே 38 லட்சம் குழந்தைகளும், உயர்வகுப்பு படிக்கும் மாணவர்களும் அடுத்த ஆண்டு படிப்பை கைவிட நேரிடலாம் என்று கூறினார்.

மேலும் அவர், இந்த ஆண்டு மழலையர் வகுப்புகளில் சேர வேண்டிய 4 கோடி குழந்தைகள், கல்வி பயிலும் வாய்ப்பை இழந்துள்ளதாகவும், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டதால், கல்வி ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருவதாகவும் ஆண்டனியோ குடரஸ் தெரிவித்துள்ளார்.

Tags :
|