Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு; 24 மணிநேரத்தில் 34 பேருக்கு பரவல்

சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு; 24 மணிநேரத்தில் 34 பேருக்கு பரவல்

By: Nagaraj Sat, 20 June 2020 10:33:40 PM

சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு; 24  மணிநேரத்தில் 34 பேருக்கு பரவல்

கொரோனா இரண்டாவது அலை.. சீனாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 34 பேருக்கு கொரோனா உறுதியானது.

சீனாவில் முதன் முதலாக பரவிய கொரோனா இன்றளவும் உலக நாடுகளை கலங்கடித்து வருகிறது. கடந்த சில வாரங்களாக சீனாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா தற்போது மீண்டும் பரவத் துவங்கி உள்ளது. இதனால் சீனர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

second wave,traffic,freeze,beijing,34 people ,இரண்டாவது அலை, போக்குவரத்து, முடக்கம், பீஜிங், 34 பேர்

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் உள்ள ஜின்ஃபாடி சந்தையில் முதன்முதலாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து அச்சந்தை மூடப்பட்டது. மற்றும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பல பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

புதிதாக தொற்று ஏற்பட்ட 34 பேர்களில் 22 பேர் தலைநகரைச் சேர்ந்தவர்கள் அவர்களில் 7 பேருக்கு கொரோனாவுக்கான அறிகுறி எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. சீனாவில் இரண்டாவது அலையாக கொரோனா பரவி வருவதால் தலைநகர் பீஜிங்கில் அவசரநிலை பிகடனப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டு போக்குவரத்து முடங்கி உள்ளது.

Tags :
|