Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சரியான திட்டமிடல் இல்லாததால் கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவிட்டது - டி.கே.சிவக்குமார்

சரியான திட்டமிடல் இல்லாததால் கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவிட்டது - டி.கே.சிவக்குமார்

By: Karunakaran Tue, 14 July 2020 11:54:59 AM

சரியான திட்டமிடல் இல்லாததால் கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவிட்டது - டி.கே.சிவக்குமார்

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் பெங்களூருவில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பேட்டி அளித்தபோது, கர்நாடக அரசின் சரியான திட்டமிடல் இல்லாததால் கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவிட்டது. கொரோனாவை தடுப்பில் மாநில அரசு முழுவதுமாக தோல்வி அடைந்துவிட்டது என்று கூறினார்.

கொரோனாவை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மந்திரிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லை. கொரோனாவை தடுக்கும் பணிகளை மேற்கொள்வதில் அரசு தவறு செய்துவிட்டது. கொரோனா தடுப்பு பணிகளை கட்சி சார்பின்றி மேற்கொள்ள வேண்டும் என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

dk sivakumar,karnataka,corona impact,proper planning ,டி.கே.சிவகுமார், கர்நாடகா, கொரோனா தாக்கம், சரியான திட்டமிடல்

மேலும் அவர், கர்நாடகம், மத்தியபிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்திவிட்டு பா.ஜனதா அரசை அமைக்க அக்கட்சியினர் திரைமறையில் சதி செய்து வருகிறார்கள். ஆனால் ராஜஸ்தானில் காங்கிரஸ் பலமாக உள்ளது. அதனால் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு உபகரணங்களை கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எங்கள் கட்சியின் சட்டசபை கட்சி தலைவர் சித்தராமையா, மூத்த தலைவர் எச்.கே.பட்டீல் ஆகியோர் கூறியுள்ளனர். இது தொடர்பாக ஆவணங்களை திரட்டி வருவதாக டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

Tags :