Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியது

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியது

By: Karunakaran Fri, 12 June 2020 1:09:29 PM

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியது

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. இதனால் கொரோனா பாதிப்பு அதிகமாகியுள்ளது.

பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் மக்கள் சற்று ஆறுதலடைந்துள்ளனர்.

india,coronavirus,china,maharastra,tamilnadu ,இந்தியா,கொரோனா,சீனா,மகாராஷ்டிரா

இந்நிலையில் இன்று மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், இந்தியாவில் மொத்தம் 297535 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 396 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8498 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 147195 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டிலே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 97648 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள தமிழகத்தில் 38716 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. டெல்லியில் 34687 பேருக்கும், குஜராத்தில் 22032 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags :
|
|