Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஒரே நாளில் இந்தியாவில் 7 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

ஒரே நாளில் இந்தியாவில் 7 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

By: Nagaraj Sat, 30 May 2020 11:35:34 AM

ஒரே நாளில் இந்தியாவில் 7 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

இந்தியாவில், ஒரே நாளில் தொற்று உறுதி செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை, முதல்முறையாக 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.65 லட்சத்தை தாண்டியது. பலி எண்ணிக்கை 4,706 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,466 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்ட நிலையில், 175 பேர் உயிரிழந்துள்ளனர். முதல்முறையாக பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

corona impact,count,increase,first,list ,கொரோனா பாதிப்பு, எண்ணிக்கை, அதிகரிப்பு, முதன்முறை, பட்டியல்

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,58,333 ல் இருந்து 1,65,799 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், பலியானவர்களின் எண்ணிக்கையும் 4,531 ல் இருந்து 4,706 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 67,692 ல் இருந்து 71,106 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்புடன் தற்போது 89,987 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 7,466 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 175 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,65,799 ஐ எட்டியதை தொடர்ந்து, இதன் மூலம், கொரோனாவால் அதிகம் பாதித்த நாடுகள் பட்டியலில் இந்தியா 9வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மேலும் பலி எண்ணிக்கை 4706 ஆக அதிகரித்ததன் காரணமாக, பலியில் கொரோனா உருவான சீனாவையும் முந்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|