Advertisement

கேரளாவில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்குகிறது

By: Nagaraj Sun, 08 Nov 2020 2:27:26 PM

கேரளாவில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்குகிறது

5 லட்சத்தை தொட உள்ள கொரோனா பாதிப்பு... கேரள மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்தை எட்ட உள்ளதால் மக்கள் அச்சமடைந்து உள்ளனர்

கேரள மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

corona,kerala,vulnerable,healed,number ,கொரோனா, கேரளா, பாதிப்பு, குணமடைந்தனர், எண்ணிக்கை

"மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,201 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,80,770 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் நேற்று மட்டும் 28 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,668 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாநிலம் முழுவதிலும் 83,261 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதுமட்டுமன்றி தற்போது வரை கொரோனா பாதிப்பிலிருந்து 3,95,624 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Tags :
|
|
|