Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது; முதல்வர் தகவல்

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது; முதல்வர் தகவல்

By: Monisha Thu, 06 Aug 2020 10:57:22 AM

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது; முதல்வர் தகவல்

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

தமிழகத்தில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த மேற்கொண்டு வரும் தடுப்புப் பணிகள் பற்றி ஆய்வு செய்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தென் மாவட்டங்களுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று காலை திண்டுக்கல்லில் ரூ.8.69 கோடி மதிப்பிலான வருவாய், ஊரக வளர்ச்சி, தோட்டக்கலை, கால்நடைத் துறை கட்டடங்களை கட்ட அடிக்கல் நாட்டினார்.

ரூ.2.96 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் பயனாளிகளுக்கு முதலமைச்சர் வழங்கினார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் கொரோனா பாதிப்பு மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

corona virus,tamilnadu,cm edappadi palaniswami,dindigul district,corona impact ,கொரோனா வைரஸ், தமிழ்நாடு, எடப்பாடி பழனிசாமி, திண்டுக்கல், கொரோனா தாக்கம்

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. திண்டுக்கல்லில் இதுவரை 43,578 பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சிறப்பான பணிகளை மேற்கொண்ட ஆட்சியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு பாராட்டுகள்.

தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் சதவிகிதம் அதிகரித்து வருகிறது. அரசின் அறிவுரையை மக்கள் கடைபிடித்தால் விரைவில் இயல்வுநிலைக்கு திரும்பலாம். பொதுமக்கள் வெளியே சென்றால் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.

தமிழகத்தில் நவம்பர் மாதம் வரை விலையில்லா கூடுதல் அரிசி வழங்கப்படுகிறது. கொரோனா தடுப்பு பணிகளுக்கு உடனடியாக நிதி ஒதுக்கப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் ஆர்.டி.-பி.சி.ஆர் சோதனை நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags :