Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்திய பாதுகாப்பு படையில் 20ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்திய பாதுகாப்பு படையில் 20ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Nagaraj Thu, 17 Sept 2020 10:05:52 AM

இந்திய பாதுகாப்பு படையில் 20ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு

20 ஆயிரம் பேருக்கு கொரோனா... இந்திய பாதுகாப்பு படையில் சுமார் 20 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக, பாதுகாப்புத்துறை இணையமைச்சர் ஸ்ரீபாத் நாயக் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் இதுதொடர்பான கேள்விக்கு எழுத்துப் பூர்வமாக பதிலளித்த அவர், இராணுவத்தில் 16 ஆயிரத்து 758 பேரும், கடற்படையில் ஆயிரத்து 365 பேரும் மற்றும் விமானப் படையில் ஆயிரத்து 716 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டு உள்ளார்.

military,corona,associate minister,vulnerability ,இராணுவத்தினர், கொரோனா, இணை அமைச்சர், பாதிப்பு

மேலும், இராணுவத்தில் 32 பேரும், விமானப்படையில் 3 பேரும் நோய்த்தொற்று பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும், மத்திய இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் உயிர் பலி மற்றும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் முன்கள பணியாற்றுபவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் இராணுவத்தினரும் கொரோனாவால் இந்தளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது குறித்து அறிந்து மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags :
|