Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு கொரோனா பாதிப்பு

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு கொரோனா பாதிப்பு

By: Karunakaran Fri, 18 Dec 2020 08:32:48 AM

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு கொரோனா பாதிப்பு

ஐரோப்பிய யூனியன் நாடுகளின் கூட்டம் பெல்ஜியம் நாட்டின் பிரசெல்ஸ் நகரில் கடந்த 10 மற்றும் 11-ம் தேதிகளில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பிரான்ஸ் பிரதமர் ஜீன் கெட்ஸ்டெக்ஸ், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சஜ்ஜீஸ், லக்சம்பர் பிரதமர் சேவியர் பெட்டல், ஐரோப்பிய யூனியன் அமைப்பின் தலைவர் உர்சுலா வெண்டர் லியன் உள்ளிப்பட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டம் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற்றது. இந்நிலையில், ஐரோப்பிய யூனியன் கூட்டத்தில் பங்கேற்ற பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இருமல் உள்ளிட்ட சில அறிகுறிகள் மேக்ரானுக்கு ஏற்பட்டதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என முடிவு வந்தது.

corona impact,french president,emmanuel macron,isolation ,கொரோனா தாக்கம், பிரெஞ்சு ஜனாதிபதி, இம்மானுவேல் மக்ரோன், தனிமை

இதையடுத்து, மேக்ரான் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். மேக்ரானின் மனைவி ப்ரிஹிடி மேக்ரனும் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இந்நிலையில், இத்தாலி அதிபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, ஐரோப்பிய யூனியன் கூட்டத்தில் பங்கேற்று மேக்ரானுடன் தொடர்பில் இருந்த மற்ற தலைவர்களும் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்.

அந்தவகையில், பிரான்ஸ் பிரதமர் ஜீன் கெட்ஸ்டெக்ஸ், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சஜ்ஜீஸ், லக்சம்பர் பிரதமர் சேவியர் பெட்டல், ஐரோப்பிய யூனியன் அமைப்பின் தலைவர் உர்சுலா வெண்டர் லியன் ஆகியோர் தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். ஐரோப்பிய யூனியன் கூட்டத்தொடரை முடித்து ஜெர்மனி திரும்பிய அதிபர் ஏஞ்சலா மெர்கல் கொரோனா பரிசோதனை செய்துகொண்டதாகவும், அதில் ஏஞ்சலாவுக்கு கொரோனா இல்லை என தெரியவந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.


Tags :