Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 2 கோடியே 30 லட்சத்தை கடந்தது!

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 2 கோடியே 30 லட்சத்தை கடந்தது!

By: Monisha Sat, 22 Aug 2020 09:57:07 AM

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 2 கோடியே 30 லட்சத்தை கடந்தது!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கம் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 30 லட்சத்து 96 ஆயிரமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, பிரேசிலில் கொரோனா வேகமெடுத்துள்ளது.

இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 68 ஆயிரத்து 898 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நேற்று 49 ஆயிரம் பேருக்கும், பிரேசிலில் 31 ஆயிரம் பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

world,corona virus,infection,death,treatment ,உலகம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 2 கோடியே 30 லட்சத்து 96 ஆயிரத்து 649 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 66 லட்சத்து 5 ஆயிரத்து 513 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 61 ஆயிரத்து 849 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

வைரஸ் பாதிப்பில் இருந்து 1 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 8 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகளின் விபரம் வருமாறு:-
அமெரிக்கா - 57,95,339
பிரேசில் - 35,36,488
இந்தியா - 29,05,824
ரஷியா - 9,46,976
தென் ஆப்பிரிக்கா - 6,03,338
பெரு - 5,67,059
மெக்சிகோ - 5,43,806
கொலம்பியா - 5,22,138
ஸ்பெயின் - 4,07,879
சிலி - 3,93,769

Tags :
|
|