Advertisement

சென்னையில் ஐந்து டாக்டர்களுக்கு கொரோனா தொற்று

By: Nagaraj Sun, 10 May 2020 3:14:50 PM

சென்னையில் ஐந்து டாக்டர்களுக்கு கொரோனா தொற்று


டாக்டர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று... கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை டாக்டர் உள்பட தனியார் மருத்துவர்கள் என 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் ஊழியர் ஒருவருக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டதை அடுத்து இம்மருத்துவமனை மூடப்பட்டது.

சென்னையில் ராயபுரம், திருவிக நகர், கோடம்பாக்கம் மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 500 ஐ தாண்டியதை தொடர்ந்து, அவை கருஞ்சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 6,535 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 45 பேர் உயிரிழந்துள்ளனர்.

people are soldiers,invisible,corona,5 doctors ,மக்கள் சிப்பாய்கள், கண்ணுக்கு தெரியாத, கொரோனா, 5 டாக்டர்கள்

தமிழகத்தில், சென்னையில் தான் அதிக கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. 3,330 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 501 பேர் குணமடைய, 2,786 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

ராயபுரம் மண்டலத்தில் 571 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 563 பேரும், திரு.வி.க., நகரில் 519 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், இந்த மண்டலங்கள் கருஞ்சிவப்பு மண்டலத்திற்கு மாறியுள்ளன.

people are soldiers,invisible,corona,5 doctors ,மக்கள் சிப்பாய்கள், கண்ணுக்கு தெரியாத, கொரோனா, 5 டாக்டர்கள்

இதனிடையே, சென்னையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறுகையில், கோயம்பேடு மூலம் கொரோனா பாதிப்புக்குள்ளாவது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இனி வரும் காலங்களில், மாஸ்க் அணிவது பழக்கமாக்கி கொள்ள வேண்டும்.

அறிகுறி இல்லாமல் கொரோனா வருவது நல்ல செய்தி. சென்னையில் அடுத்த 6 நாட்களுக்கு மட்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்வாக இருக்கும். இதனால் மக்கள் அச்சப்பட வேண்டாம். கண்ணுக்கு தெரியாத கிருமிக்கு எதிரான போரில், மக்கள் சிப்பாய்கள் போல் செயல்பட வேண்டும் என்றார்.

Tags :
|