Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தேசிய சராசரியை விட ஆந்திராவில் கொரோனா பாதிப்பு குறைவு

தேசிய சராசரியை விட ஆந்திராவில் கொரோனா பாதிப்பு குறைவு

By: Nagaraj Sat, 08 Aug 2020 4:11:53 PM

தேசிய சராசரியை விட ஆந்திராவில் கொரோனா பாதிப்பு குறைவு

கொரோனா பாதிப்பு குறைவு... ஆந்திராவில் கொரோனா பாதிப்பு விகிதம், தேசிய சராசரியை விட குறைவாகவே உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். கட்டுப்பாட்டுப் பகுதிகளில் 85% முதல் 90% பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். அவசர அழைப்பு உதவி மையங்கள் திறம்பட செயல்பட வேண்டும் என்றும் இதனை அதிகாரிகள் தவறாமல் கண்காணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இறப்பு விகிதத்தை குறைக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கேட்டறிந்தார்.

corona,andhra,vulnerability,decline,cm,national average ,கொரோனா, ஆந்திரா, பாதிப்பு, குறைவு, முதல்வர், தேசிய சராசரி

காய்ச்சல் மற்றும் குறைந்த ஆக்ஸிஜன் அளவு உள்ள நோயாளிகள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாகவும், பிரச்சினைகள் அதிகரித்தால், உடனடியாக கொரோனா சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா பாதிப்பின் தேசிய சராசரி 8.87%, ஆக உள்ள நிலையில் ஆந்திராவில் அது 8.56% என்றும் இறப்பு விகிதம் 2.07%, ஆக உள்ள நிலையில் மாநிலத்தில் 0.89% ஆக இருப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆந்திராவில் இதுவரை 2,06,960 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,842 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|
|