Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கன்னியாகுமரியில் முறையாக இ-பாஸ் வாங்காமல் வருபவர்களால் கொரோனா அதிகரிப்பு

கன்னியாகுமரியில் முறையாக இ-பாஸ் வாங்காமல் வருபவர்களால் கொரோனா அதிகரிப்பு

By: Nagaraj Sat, 13 June 2020 8:36:45 PM

கன்னியாகுமரியில் முறையாக இ-பாஸ் வாங்காமல் வருபவர்களால் கொரோனா அதிகரிப்பு

முறைப்படி இ பாஸ் பெறாமலே குமரி மாவட்டத்திற்கு வருபவர்களால் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடக்கத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று தற்போது நாள் தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னை, மும்பை உட்பட வெளியூர்களில் வசிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தினமும் வருவதே இதற்கு காரணமாகும்.

அதிலும் முறைப்படி இ பாஸ் பெறாமலே குமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளை, ஆரல்வாய்மொழி சோதனை சாவடிகளை தவிர பிற குறுக்கு சாலைகளில் நூற்றுக்கணக்கானோர் வருவது தெரியவந்துள்ளது. இதைத் தெடடர்ந்து அஞ்சுகிராமம், லெவிஞ்சிபுரம் வழித்தடத்தில் உள்ள குறுக்கு பாதைகளை சீல் வைத்த போலீஸார் கண்காணித்து வருகின்றனர்.

ஆனாலும் பல வழிகளில் இ பாஸ் இல்லாமல் அதிகமானோர் வருவதால் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் கூறியதாவது:


heavy action,e-pass,virgin,corona,increase ,
கடும் நடவடிக்கை, இ-பாஸ், கன்னியாகுமரி, கொரோனா, அதிகரிப்பு

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய சிகப்பு மண்டலங்களில் இருந்தும், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடியை தவிர பிற மாவட்டங்களில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருவோர்கள் முறையாக இ பாஸ்சிற்கு விண்ணப்பித்து அனுமதி பெற்ற பின்னரே கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புறப்பட்டு வரவேண்டும்.

அவ்வாறு முறையான நுழைவு அனுமதியான இ பாஸ் இன்றியோ, பரிசோதனைக்கு உட்படாமலோ யாராவது மாவட்டத்திற்குள் வருவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags :
|
|
|