Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தென் மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா... புதிதாக 299 பேருக்கு பாதிப்பு

தென் மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா... புதிதாக 299 பேருக்கு பாதிப்பு

By: Monisha Fri, 11 Sept 2020 10:10:29 AM

தென் மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா... புதிதாக 299 பேருக்கு பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 86 ஆயிரத்து 052 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னையை தொடர்ந்து தென் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று 123 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் நெல்லை மாவட்டத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்து 774 ஆக உயர்ந்துள்ளது. கோவில்பட்டி பகுதியை சேர்ந்த 61 வயது முதியவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

southern district,corona virus,infection,death,treatment ,தென் மாவட்டங்கள்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

தென்காசி மாவட்டத்தில் புதிதாக 64 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்து 92 ஆக உயர்ந்து உள்ளது. தொற்று பாதிக்கப்பட்டவர்கள் தென்காசி, செங்கோட்டை, சங்கரன்கோவில், கடையம், கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள். நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை சுற்றிலும் சுகாதாரப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இருப்பினும் நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 112 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியது. இதுவரை 12 ஆயிரத்து 66 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 11 ஆயிரத்து 240 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 708 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 118 பேர் கொரோனா தொற்று காரணமாக இறந்து உள்ளனர்.

Tags :
|