Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி, ஐஐடி மற்றும் மருத்துவக் கல்லூரி, உள்ளிட்ட பல கல்லூரிகளில் கொரோனா தொற்றால் மாணவர்களுக்கு தற்போது விடுமுறை

கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி, ஐஐடி மற்றும் மருத்துவக் கல்லூரி, உள்ளிட்ட பல கல்லூரிகளில் கொரோனா தொற்றால் மாணவர்களுக்கு தற்போது விடுமுறை

By: vaithegi Wed, 29 June 2022 5:05:48 PM

கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி, ஐஐடி மற்றும் மருத்துவக் கல்லூரி,   உள்ளிட்ட பல கல்லூரிகளில் கொரோனா தொற்றால்  மாணவர்களுக்கு தற்போது விடுமுறை

சென்னை: தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு நாட்டில் 1000யை கடந்து வரும் நிலையில் சென்னையில் தினசரி பாதிப்பு 400யை நெருங்குகிறது. அதனால் சென்னை செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் அமல்படுத்தி இருக்கிறது.

இதனால் பொது மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், பொது இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் எனவும் மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

college,holidays ,கல்லூரி,விடுமுறை

மேலும் சென்னையில் போரூர் மற்றும் திருவள்ளூரில் செயல்பட்டு வரும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து, கணிசமாக அதிகரித்து வரும் கொரோனாவால் கல்லூரிகளில் மாணவர்களுக்கு பாதிப்பு மிக வேகமாக பரவி வருகிறது.

ஏற்கனவே ஐஐடி மற்றும் மருத்துவக் கல்லூரி, கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரிகளில் கொரோனா தொற்று மாணவர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அந்த கல்லூரிகளுக்கு தற்போது விடுமுறை விடப்பட்டுள்ளது.

Tags :