Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பின்னர் மீண்டும் கொரோனா பாதிப்பு

நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பின்னர் மீண்டும் கொரோனா பாதிப்பு

By: Nagaraj Tue, 11 Aug 2020 6:47:37 PM

நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பின்னர் மீண்டும் கொரோனா பாதிப்பு

வெற்றிகரமாக 100 நாட்களை கடந்த நிலையில் நியூசிலாந்தில் தற்போது 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

102 நாட்களுக்குப் பிறகு மீண்டும் நியூசிலாந்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து ஆக்லாந்து நகரில் 3 நாள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவை வெற்றிகரமாக ஒழித்து விட்டதாக உலக நாடுகள் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் பாராட்டை பெற்ற நியூசிலாந்து தொற்று மீண்டும் ஏற்பட்டுள்ளதால் திகைத்துப் போய் உள்ளது.

corona,second wave,warning,102nd day ,கொரோனா, இரண்டாவது அலை, எச்சரிக்கை, 102 வது நாள்

இரண்டு கோடியே 20 லட்சம் பேர் உள்ள நியூசிலாந்தில் 22 கொரோனா மரணங்கள் மட்டுமே நிகழ்ந்ததால், எந்தவிதமான கட்டுப்பாடுகளோ சமூக இடைவெளியோ இன்றி அங்குள்ள மக்கள் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பினர்.

அதே நேரம் கொரோனாவின் இரண்டாம் அலை வீசலாம் என்ற சுகாதாரத்துறை அதிகாரிகளின் எச்சரிக்கையை நிரூபிக்கும் வகையில் மீண்டும் கொரோனா தொற்று தலைகாட்டியுள்ளது.

Tags :
|